மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் 8.5 அடி உயரத்தில் ஆனந்த கூத்தராகிய ஸ்ரீ நடராஜ பெருமான் உலகில் மிகப் பெரிய நடராஜர் சிலை வடிவமாக காட்சி அளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் கடந்த 17 ஆம் தேதி திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தது. திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக தொடங்கி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு: டிச.27 விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், திரவியம், இளநீர், பழவகைகள் உள்ளிட்ட ஆபிஷேச பொருட்கள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Saattai Duraimurugan : சாட்டை துரைமுருகன் மீது பாய்கிறதா குண்டாஸ்?’ காவல்துறையினர் ஆலோசனை..!
பின்னர் சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மேளதாளம் இசைக்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே செய்தது துரோகம்… இந்துத்துவத்தை சமரசம் செய்தார்…’ - அமித்ஷா சாடல்
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...
நரகத்தில் கூட இடம் கிடைக்காது’ - குஷ்பு ஷேர் செய்த உணவை தவறவிட்ட பாட்டியின் வைரல் விடியோ!