தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்நாட்டு அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் கடந்த டிசம்பர் 16-ம் தேதி விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.
இதுவரை தென்னாப்ரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிடாத இந்திய அணி, இம்முறை முதல் முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது. மைதானம் சென்றடைந்த முதல் நாளில் இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் வீரர்கள்.
இந்நிலையில், பிசிசிஐ இன்று வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தலைமை பயிற்சியாளர் டிராவிட், “தரமான பயிற்சி” “முழு வேட்கை தேவை...” என சொல்லுவது போல வீடியோவில் வருகின்றது. “அடுத்த மூன்று நாட்கள் பயிற்சியும் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கின்றோம்” என அவர் தெரிவித்திருக்கிறார்.
வீடியோவை காண:
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியாங்க் பஞ்சல், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்