சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி திருமஞ்சன திருவிழா..! 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 

Continues below advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா  கொடியேற்றத்துடன்  இன்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூலை 5ம்  தேதியும் மற்றும் 6ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெற உள்ளது. 

Continues below advertisement

Wimbledon 2022: சாம்ப்ரஸ் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?இன்று தொடங்கும் விம்பிள்டன்!


பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தீட்சிதர்கள் மட்டுமே  கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. 


Lion Death: வண்டலூர் உயிரியல் பூங்காவில், மூத்த சிங்கம் உயிரிழப்பு.. சாதனை படைத்த சிங்கம்..!

தற்போது கொரோனா தொற்று  குறைந்ததன் காரணமாக கட்டுப்பாடுகள் இல்லாத பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது.  கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு கொடி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து,  பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர், வேத மந்திரங்கள் ஓத கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.


இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா யாராக இருந்தாலும்.... ஒற்றை தலைமை குறித்து திருநாவுக்கரசர் கருத்து..!

தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை, அர்ச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோயில் உள்ளே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இன்றிலிருந்து பதினொரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக கருதப்படும் திருத்தேரோட்டம் அடுத்த  மாதம் ஜூலை 5 -ம் தேதியும்  6 -ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனம்  விழாவும் நடைபெற உள்ளது. ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக கோவில் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement