அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை பூதாகரமாகி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்நிலையில், தான் தற்போது திடீரென்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது, இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தின் பதவியை பறிக்க திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டாதா சி.வி.சண்முகம் ஏற்கனவே கூறிய நிலையில், அவரது பொருளாளர் பதவி அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் திட்டமான அக்னிபத் திட்டத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்த திட்டத்தை கண்டித்து அதை திரும்பப் பெற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோசங்களை எழுப்பினர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் எம்.பி கூறும்போது, இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்த்து இருக்க வேண்டும். அக்னிபத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை இத்திட்டம் மூலம் நாசப்படுத்துகின்றனர் என்றார்.



மேலும், தற்போது தமிழகத்தில் அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்னையை குறித்த கேள்விக்கு, அதிமுக  எதிர்காலம் குறித்து சொல்ல நான் ஜோசியக்காரன் கிடையாது. எம்ஜிஆர்,  ஜெயலலிதா காலத்தில் அக்கட்சியில் இருந்தவன் என்ற முறையிலும் பொதுவான அரசியல்வாதி என்ற முறையில் கூறும்போது, இந்தியாவில் தேசிய கட்சியோ, மாநில கட்சியோ இரட்டை தலைமையில் செயல்படவில்லை என்றார். இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியாது, இரண்டு கப்பலில் பயணம் செய்ய முடியாது, எனவே ஒற்றை தலைமை வேண்டும். அது இபிஎஸ, ஓபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களின் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். பலமான எதிர்க்கட்சி தேவை. எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். மத்தியில் நாளை ராகுல்காந்தி தலைமையில் எங்கள் ஆட்சி அமையும்போது பிஜேபி எதிர்கட்சியாக இருக்க வேண்டும். எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண