டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் பழமை வாய்ந்த தொடர்களில் ஒன்று விம்பிள்டன். இந்தாண்டு 135வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இன்று முதல் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. இதில் முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரர் பங்கேற்கவில்லை. பிரஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் விம்பிள்டன் தொடரில் களமிறங்குகிறார். அத்துடன் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச் களமிறங்குகிறார். ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


இந்தத் தடை காரணமாக டெனியல் மெத்வதேவ் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நடால், ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் சிட்சிபாஸ், கார்லோஸ் அல்கராஸ் உள்ளிட்ட வீரர்கள் போட்டியாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. 


 






7வது பட்டத்தை குறி வைக்கும் ஜோகோவிச்:


விம்பிள்டன் வரலாற்றில் இதுவரை அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரராக ரோஜர் ஃபெடரர் உள்ளார். அவர் தற்போது வரை 8 முறை விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ரஸ் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்தச் சூழலில் இம்முறை நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றால் பீட் சாம்ப்ரஸின் 7 பட்டங்கள் என்ற சாதனையை சமன் செய்துவிடுவார். ஆகவே நடப்புச் சாம்பியன் ஜோகோவிச் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


அதேசமயத்தில் 22 கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றுள்ள ரஃபேல் நடால் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆகவே நடால் விம்பிள்டன் தொடரை அதிக வாய்ப்பு உள்ளதாக சிலர் கருதுகின்றனர். ஏற்கெனவே நடால் இந்தாண்டு நடைபெற்றுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் பிரஞ்சு ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் தொடர்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அத்துடன் சேர்த்து இம்முறை விம்பிள்டன் தொடரையும் நடால் வெல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண