மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்த படியாக கரும்பு மற்றும் பருத்தி பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்தாண்டு அதிக நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.




இந்தாண்டு மாவட்டத்தில் முன்னதாக பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் பருத்திகள் வெடித்து விற்பனைக்கு தயாரானதால், முன்கூட்டியே விற்பனைக்கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்  திறக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களிலேயே முதல் முறையாக செம்பனார்கோயில் தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின்கீழ் (இ-நாம்) முறையில் மறைமுக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.


NDA Meeting: ’அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்’ - என்.டி.ஏ கூட்டத்தில் மோடி பேச்சு..




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி ஏலம்  நடைபெற்று வருகிறது.


No-Confidence motion: நம்பிக்கையில்லா தீர்மானம்.. 15 முறை எதிர்கொண்ட இந்திய பிரதமர்.. ஆட்சியை இழந்த 3 பேர்..!




இதில்,  மஹாராஷ்ட்ரா,  ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநில மில் அதிபர்களாலும், தேனி, கோவை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்ட மில் அதிபர்கள்,  வணிகர்களால் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 1,850 டன் பருத்தியை 8 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. வானிலை ஒத்துழைத்து மழை இன்றி வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், பருத்திகள் மழையில் நனையாமல்  நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.