அரிய வகை தாவர இனங்களை பாதுகாக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இப்பூங்காவானது, 138 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.300 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
தாவரவியல் பூங்கா:
அரிய வகை தாவர வகை இனங்களை வளர்த்து பாதுகாத்து, வகைப்படுத்தி அத்தாவரங்கள் குறித்தான ஆராய்ச்சி மேற்கொள்வதே தாவரவியல் பூங்காவின் நோக்கமாக உள்ளது.
மேலும் , அரிய வகை தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை பற்றிய புரிதல் ஏற்படுத்தவும் தாவரவியல் பூங்கா உதவுகிறது.
கடம்பூர் தாவரவியல் பூங்கா:
இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் உள்ள கடம்பூரில், ரூ. 300 கோடி மதிப்பில் 138 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.
இனத்தாவரவியல் பூங்காவானது, இங்கிலாந்தின் ராயல் பூங்காவுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில், அருகி வரும் தாவர இனங்களை பாதுகாத்தல், உள்நாட்டு இனங்களை காட்சி படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில், தாவரங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கல்வி திட்டமும், நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: நிலக்கடலை பயிரில் ரைசோபியம் உயிர் உரம் பயன்பாடு - வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்…………..