உழவர் நலத்துறையின் கீழ் உயர்தர ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி.




குளித்தலை அண்ணா சமுதாய கூடத்தில் பல  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில்  உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது.




கரூர் மாவட்டம், குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தில்  உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.




தொடர்ந்து ஐ சி ஏ ஆர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர்  திரவியம்,
எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியர் தேவி ஆகியோர்கள் கண்காட்சி குறித்த தொழில் நுட்ப உரை மற்றும் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள், தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த 
ரகங்களை உருவாக்கும் வகையில், தேவையான அடிப்படை மரபணுக்களை பாரம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது, சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் எம் ஐ டி வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சி அமைத்திருந்தனர்.


ஆலையே இல்லாத ஊரில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடி.


கரூர் மாவட்டம் புகலூர் சர்க்கரை ஆலை இஐடி பாரி நிறுவனம் சார்பில் குளித்தலை பகுதி விவசாயிகளுக்கு கரும்பு பயிர் சாகுபடி செய்ய ஊக்கத்திட்டங்கள் அறிவிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. 


புகலூர் சர்க்கரை ஆலை பொது மேலாளர் இளங்கோவன் பேசியதாவது. நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 5 ஆலைகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால் இப்போது மூன்று ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் ஒன்று உங்கள் பகுதியைச் சேர்ந்த பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை.


குளித்தலை சுற்று வட்டார பகுதிகளில் ஆளை நிறுத்தப்பட்ட போதிலும் ஐந்து ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடி அளிப்பதாக உள்ளது. இ ஐ டி நிறுவனம் கரும்பு வெட்டியவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை 14 நாட்களில் உடனுக்குடன் வழங்கி வருவது இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் தமிழகத்தில் இப்போது மேட்டூர் அணை நிரம்பி வழிவதால் விவசாயம் செழித்து வருகிறது. கரும்பு உற்பத்தியில் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் ஆலைநிர்வாகம் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்துள்ளது. குளித்தலை பகுதியில் கரும்பில் பூச்சித்தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த ஆளை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். 


நிகழ்ச்சியில் முதுநிலை மேலாளர் காந்திமதி, அதிகாரிகள் ராஜேஸ்வரி, சங்கர், குளித்தலை பகுதி கரும்பு ஆய்வாளர் அண்ணாதுரை, முன்னோடி விவசாயி பிரபு, உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.