இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கின் பிறந்த நாள் இன்று ஆல் ரவுண்டர், ஆக்ரோஷக்காரர், சுழலிலும் மிரட்டுபவர் என ரசிகர்களால் பாரட்டபடுபவர் கிரிகெட்டில் ரிவஞ்ச் சம்பவம் என்றால் யுவராஜ் சிங்கின் ஆறு சிக்சர்ஸ் தான் நினைவுக்கு வரும் 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முற்றிலும் இளம் படையாக எம்.எஸ்.தோனி தலைமயில் மாறியது தென்னாப்பிரக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் தோனி தலைமையில் பங்கேற்றது செப்டம்பர் 19-ந் தேதி டர்பனில் நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதின இந்திய அணி 18 ஓவர்களில் 171 ரன்களுடன் களத்தில் இருந்தது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த யுவராஜ்சிங்கிடம் இங்கிலாந்து வீரர் ப்ளின்டாப் ஏதோ வார்த்தை தகராறில் ஈடுபட்டார் கோபமடைந்த யுவராஜ்சிங் ஓரே ஓவரில் 6 சிக்சர்ஸ் விளாசினார் யுவராஜ்சிங் படைத்த இந்த சாதனையை இதுவரை இத்தனை டி20 உலகக்கோப்பையில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை