அப்பானாசனா - முட்டியை நெஞ்சு பகுதிக்கு கொண்டு வர வேண்டும்



இந்த ஆசனத்தை செய்வது மிகவும் எளிது



பாலாசனா - முட்டி போட்டு தலை பகுதியை தரைக்கு கொண்டு வந்து கைகளை பின்புறம் வைக்க வேண்டும்



இடுப்பு பகுதியில் ஏற்படும் வலியை குறைக்க உதவும்



சுப்த மத்யேந்திரஸ்தனா - தரையில் படுத்துகொள்ள வேண்டும்



பின் கால் மற்றும் இடுப்பு பகுதியை எதிர் திசையில் வளைக்க வேண்டும்



அர்த்த மத்ஸ்யேந்திராசனா - உட்கார்ந்து கொண்டு இதை செய்ய வேண்டும்



கால்களை எதிர் திசையில் வைத்து, உடம்பை அதற்கேற்றவாரு வளைக்க வேண்டும்



உட்கட்ட கோனாசனா - கால்களை விரித்து நின்று கைகளை மேலே தூக்க வேண்டும்



உத்திட்ட திரிகோணாசனா - கால்களை விரித்து மாற்றி மாற்றி குணிந்து உடலை வளைக்க வேண்டும்