இது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழ விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான் தங்களுக்கு விருப்பமான மாம்பழங்களை தேடி தேடி சாப்பிடுவார்கள் பங்கனபள்ளி, நீலம், செந்துரா போன்ற பலவகை மாம்பழங்கள் உண்டு பங்கனபள்ளி போன்ற மாம்பழங்கள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் சுவையான மாம்பழங்களுக்கு மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகம் தற்போது ட்ரெண்டிங்கில் ஒரு மாம்பழம் உள்ளது மிக விலை உயர்ந்த மியாசாகி மாம்பழம் தான் அது மேற்கு வங்க சிலிகுரி மாம்பழ திருவிழாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே விலை உயர்ந்தது இந்த மியாசாகி மாம்பழம் தானாம் சர்வதேச சந்தையில் மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ 2.75 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்