ஆஸ்கர் விருது சிலையை உருவாக்கியவர் யார் தெரியுமா?
உலகில் சிறந்த திரைப்படங்களுக்கு சிறந்த விருதாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருவது நமக்குத் தெரியும்.
ஆஸ்கர் விருதைப் போலவே, அந்த விருது சிலையும் மிகவும் பிரபலம்.
இந்த சிலை, 1927-ம் ஆண்டு செட்ரிக் கிப்பன்ஸ் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது சிலை பதிமூன்றரை அங்குல உயரமும், எட்டரை பவுண்டு எடையும் கொண்டது.
1982-ம் ஆண்டு முதல் இந்த சிலையை. செட்ரிக்/கிப்பன்ஸ், அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் ஆர்.எஸ்.ஒன்ஸ் அண்ட் கம்பெனி என்ற நிறுவனம் தயார் செய்து கொடுத்து வருகிறது.
போர்வீரன், கையில் கத்தியைப் பிடித்து ஊன்றி நிற்பது போல வடிவமைக்கப்பட்ட இதில், ஐந்து கோடுகள் காணப்படும்.
ஒரு நல்ல திரைப்படம் உருவாக பிரதான காரணமாக இருப்பவர்கள் இயக்குனர், நடிகர், கதாசிரியர், தொழில்நுட்ப வல்லுநர், தயாரிப்பாளர். இவர்கள் ஐவரையும் குறிப்பதாக இந்த ஐந்து கோடுகள் உள்ளன.
பொருளாதார நிலை மீண்ட பின்பு தங்க முலாம் பூசப்பட்டு, இப்போது வரை அதேபோல் வழங்கப்பட்டு வருகிறது
ஆஸ்கர் விருது பெறுவதை சர்வதேச திரைப்பட உலகம் மிகவும் பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுகிறது.