பாக்கெட் உணவுகளில் பிஸ்கட்க்ள் கொஞ்சம் ஆரோக்கியமானது என்று கருத்து நம்மிடம் உண்டு. பிஸ்கட்களில் எந்த சத்துக்களும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். பிஸ்கட் முழுக்க முழுக்க உடலுக்கு தீங்கானவை என்றது மருத்துவ உலகம். பிஸ்கட் வயிற்றை நிரப்புமே தவிர, அதில் ஊட்டச்சத்தும் கொஞ்சமும் இல்லை. இதில் சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எல்லாம் ஆரோக்கியமற்றவையே.. நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்படுவதும் ஆபத்தானதுதான். இதனால் ஒபிசிட்டிதான் மிஞ்சும். ஆரோக்கியம் என்று நினைத்து குழந்தைகளுக்கு இனி, பிஸ்கட்டை சாப்பிட கொடுக்க வேண்டாம். கிரீம் பிஸ்கட்கள் இன்னும் ஆபத்தானவை. பிஸ்கட்டில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. ஆரோக்கியமுடன் வாழ பிஸ்கட்டிற்கு நோ சொல்லலாம் இல்லையா!