ரெடின் கிங்ஸ்லி அரசு கண்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். ‘அவள் வருவாளா’ படத்தில் குரூப் டான்ஸராக பணியாற்றியுள்ளார். நெல்சன் கல்லூரிப்படித்துக் கொண்டிருந்த போது ரெடின் அவருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கி பாதியில் நிறுத்தப்பட்ட வேட்டை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகமானார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். எல்.கே.ஜி, கூர்கா, ஏ1, ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். டாக்டர் படத்தில் இவரது நடிப்பு ரசிக்க வைத்தது. எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடனம் மீது அதிக ஆர்வம் உடையவர்.