இந்தியாவில் சாதம் மற்றும் சப்பாத்தி தான் மக்களால் அதிகம் சாப்பிடப்படுகிறது பலர் சாதம் சாப்பிட்டால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள் வேண்டுமெனில் வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம் சாதத்தில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அது எளிதில் செரிமானமாகும் நீரிழிவு நோயாளிகள் சாதத்தை தவிர்ப்பது தான் நல்லது கோதுமை மாவில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், செலினியம், போன்றவை உள்ளது சப்பாத்தியில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது சப்பாத்தி சாதத்தை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி சிறந்தது. ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது உடல் பருமன் உள்ளவர்கள் நார்ச்சத்து அதிகம் நிறைந்த சப்பாத்தியை சாப்பிடுவது நல்லது