தலைமுடி மற்றும் சரும பாதுகாப்பிற்கு தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்புவதில்லை தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது தேங்காய் எண்ணெய், ஊடுருவி உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்ய உதவும் குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்னர் சிறிது தேங்காய் எண்ணெயை தேய்த்து கொள்ளுங்கள் முடியின் வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும் கூந்தல் உதிர்வை தடுக்கலாம் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் பொடுகு உள்ளிட்ட பல உச்சந்தலை பிரச்சினைகளை தடுக்கலாம் சுத்தமான தலையில்தான் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும் என்பது குறிப்பிடதக்கது