குழந்தைகளுக்கு எந்த வயதில் என்ன கொடுக்க வேண்டும்?



பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மூலமே அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும்



ஆறு மாதங்களுக்குப் பின் சாதம், பழங்கள், சத்துமாவு கஞ்சி போன்றவற்றை அறிமுகம் செய்யலாம்



ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்



ஒரு வயதுக்குப் பின் சத்துகளின் அடிப்படையில் உணவுகளை பழக்கலாம்



புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த சரிவிகித உணவுகளைக் கொடுப்பது அவசியம்



சுண்டல், பழங்கள், கடலை உருண்டை, சத்துமாவு லட்டு போன்றவற்றைக் கொடுக்கலாம்



சுண்டல் வகைகளை நன்கு வேகவைத்து மசித்துக் கொடுப்பது அவசியம்



சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது



போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்