காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பது நீண்ட காலமாக இருக்கும் ஒரு பழக்கம் பால் கலந்த காஃபியை விட, ப்ளாக் காஃபி நல்லது காஃபி பிரியர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், சமீபத்தில் புல்லட் புரூப் காபி அறிமுகமானது இந்த காஃபி வகை உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது காஃபியில் இருக்கும் காஃபின் பசியை குறைக்க உதவுமாம் இதனால் தேவையான அளவிற்கு மட்டும் உணவை சாப்பிடுவோம் அதன் விளைவாக உடல் எடை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன இந்த காஃபி வகையில் உயர்தர காபி, க்ராஸ் ஃபெட் பட்டர், மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு எண்ணெய் சேர்க்கப்படுகிறது காலையில் இதை குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான டயட்டையும் பின்பற்றுவது அவசியம்