மூன்று வடிவ கிரிக்கெட் போட்டியிலும் அசத்தும் பேட்ஸ்மேனாக கலக்கி வருபவர் விராட்கோலி



தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்



அடிலெய்டில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்



சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார்



ஆசிய கோப்பைக்கு பிறகு பேட்டிங்கில் அசத்தி வரும் விராட்கோலி இன்றைய போட்டியிலும் அரைசதம் விளாசினார்



இன்றைய அரைசதம் மூலம் விராட்கோலி சர்வதேச டி20 போட்டியில் 37வது அரைசதத்தை எட்டினார்



மேலும் டி20 உலககோப்பைத் தொடரில் மட்டும் 100 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்



டி20 உலககோப்பையில் 100 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய வீரர் விராட்கோலி என்பது குறிப்பிடத்தக்கது



சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 115 போட்டிகளில் 1 சதம் மற்றும் 37 அரைசதங்களை விளாசியுள்ளார்



மேலும், டி20 உலககோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்