டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் விளாசினார் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி இந்த ஆட்டத்தில் 26 ரன்களில் வெளியேறினார் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது இந்தியா இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மதேவெரே ஆட்டமிழந்தார் இதையடுத்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஜிம்பாப்வே அதிகபட்சமாக அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 115 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழக்க, 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது