வைரலாகும் முடவாட்டுக்கால் சூப் நன்மைகள்..! முடவாட்டுக்கால் சூப் முடவாட்டுக்கால் கிழங்கால் செய்யப்படுகிறது முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்று அழைக்கப்படுகிறது இது மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள் குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது நாள்பட்ட மூட்டுவலி அது உடலில் எங்கு இருந்தாலும் அதன் வலி மேலும் தீவிரமாகமால் தடுக்க இந்த சூப் உதவலாம் இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்றவைக்கு நல்ல மருந்தென கூறப்படுகிறது