தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வைரஸால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன. இத்தகைய அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது.
வழக்கமான காய்ச்சல் மருந்துகளை அளித்தால்போதும். வேறு மருந்துகள் எதுவும் அவசியமில்லை.
எனினும் இதயம், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் வேறு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
நிறைய நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும்.
* தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்ள வைக்க வேண்டும்.
தொடர்ச்சியாக பாராசிட்டமாலைக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. ஏனெனில் பாராசிட்டமால், கல்லீரலைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
வழக்கமாக காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும். 3 நாட்கள் வரை மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
எனினும் மூச்சுத் திணறல், வலிப்பு உள்ளிட்ட அபாய அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.
முடிந்த அளவு வெளிப்புற உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.