அண்ணா 1909 -செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தார் பொருளியல் மற்றும் அரசியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் தமிழ் திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகள் மூலம் பரப்புரை மேற்கொண்டார் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிகட்சியில் சேர்ந்தார். திராவிடக் கழகத்தில் இணைந்தார் பெரியாருடன் முரண்பாடு காரணமாக, தி.க-விலிருந்து பிரிந்து 1949-ல் திமுக-வை தோற்றுவித்தார் 1967-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் 1969 ஜனவரி 14ல், மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றி, வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் புற்று நோய் காரணமாக 1969-ல் காலமானார்.அவரது இறப்பில் திரண்ட மக்கள் கூட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது பேச்சாற்றலில் வல்லவர், பல இலக்கிய புத்தகங்களை எழுதியுள்ளார்