எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது.



ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே.



உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.



மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.



என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.



சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்.



கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.



உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.



முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.




நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.