இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கேக்வாட். அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தொடர் ஆரம்பித்து நான்கு தினங்களே ஆன நிலையில் 3 முறை சதம் அடித்து அசத்தி இருக்கிறார் ருதுராஜ் vs மத்திய பிரதேசம் - 136 (112) 14 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் vs சட்டிஸ்கர் - 154* (143) 14 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் vs கேரளா - 124 (129) 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் இன்று கேரளாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருக்கிறார் ருதுராஜ். இதன் மூலம், விஜய் ஹசாரே கோப்பையின் ஒரே சீசனில் அடுத்தடுத்து மூன்று சதங்கள் கடந்து வெளுத்து வாங்கி இருக்கிறார் 2021-2022 விஜய் ஹசாரே சீசனில் வெறும் 3 இன்னிங்ஸில் 400 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார் இந்த சூப்பர் பேட்டர்