தென் திரையுலகின் முன்னனி நடிகர் விஜய் தேவரகொண்டா இவர் மேல் க்ரஷ் வைக்காத இளம் பெண்களே இல்லை இவர் நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது இதன் ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இப்படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ ராேலில் நடித்துள்ளார் இவர் குறித்து விஜய் தேவரகொண்டா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் மைக் டைசனின் மணிக்கட்டு மிகப்பெரியது என அவர் கூறியுள்ளார் ஒரு நாள் ரிகர்சலின் போது மைக் டைசன் தவறுதலாக இவரை குத்திவிட்டாராம் அதனால் இவரால் எழுந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார் இவரது லைகர் படத்திற்கு இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது