‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிலம்பரசன் `வெந்து தணிந்தது காடு’படத்தில் நடித்து வந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வந்தது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது முன்னதாக `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படங்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். இந்தப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும், இந்தப்படத்திற்கு சித்தார்த்தா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார் வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளிவருகிறது இந்தநிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் படப்படிப்பு தளத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது