கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் 3வது திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'



இந்த படத்தின் ஆடியோ லான்ச் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது



ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்



சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்


'இது ஒரு தனி மனிதன் பற்றின உண்மையான கதை. இப்படத்தில் அந்த மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் 3 மணி நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது’
என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார்



இசை வெளியீட்டு விழாவில் அசத்தலான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்



சிறப்பு விருந்தினராக சிம்புவின் நண்பர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார்



நடிகர் ஜீவா, படம் வெற்றி பெற வாழ்த்தினார்



நடிகர் கமல் ஹாசன் இப்படத்தின் இசையை வெளியிட்டார்



ராதிகா, கமலுடன் இணைந்து இசையை வெளியிட்டார்