வைரலாகும் வருண் - லாவண்யா திருமண புகைப்படங்கள்.. சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நகேந்திர பாபுவின் மகன் நடிகர் வருண் தேஜ் இவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வருணும் நடிகை லாவண்யா த்ரிப்பாதியும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன இவர் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் கடந்த ஜூன் மாதம் வருண்-லாவண்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது இதனையடுத்து இவர்களுக்கு தற்போது இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது இந்த திருமண விழாவில் வருண் தேஜின் குடும்பத்தை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர் வருண்-லாவண்யா தம்பதிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது