வாரிசை விட துணிவிற்கு அதிக திரையரங்குகள்.. உண்மையை உடைத்த திருப்பூர் சுப்பிரமணியம்!

பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு, துணிவு படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது

துணிவு படத்தின் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

துணிவு திரைப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்

இதேபோல பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

திரையரங்கில் துணிவு படம் வெளியாவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின

மொத்தமுள்ள 1200 தியேட்டர்களில் 700 துணிவு படத்துக்கும், 500 வாரிசு படத்துக்கும் கிடைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது

திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இதனை மறுத்துள்ளார்

இதுவரை திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்