உடற்பயிற்சி மூலம் தனது அழகை மேம்படுத்தியுள்ளார் வரலட்சுமி தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி பின்னர் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார் அதன் பின் இவருக்கு எதிர்மறை ரோல்களே அதிகம் கிடைத்தது சமீபத்தில் இவர் நடித்த இரவின் நிழல் படத்திற்க்கு பாராட்டுக்களை பெற்றார் அதேசமயத்தில் உடற்பயிற்சி மூலம் மேலும் அழகைக் கூட்டியுள்ளார் வரலட்சுமி போராட்டம் உண்மையானது, சவால் உண்மையானது என கூறினார் நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்