கூந்தலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் அவை வலுவிழந்து காணப்படும்



அவகாடோவில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ கூந்தலை ஆரோக்கியமாக்க உதவும்



அழகான கூந்தலை பெற அவகாடோக்களை இப்படி பயன்படுத்துங்கள்..!



தேவையான பொருட்கள் : அவகாடோ - 1, தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்



முதலில் ஒரு பவுலில் அவகாடோ பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்



அதோடு தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்



இந்த கலவையை உச்சந்தலை முதல் கூந்தலின் நுணி வரை நன்றாக தடவ வேண்டும்



30 நிமிடங்களுக்கு இந்த கலவையை அப்படியே ஊற வைத்திடுங்கள்



பின் குளிர்ந்த நீரில் சாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி அலசிட வேண்டும்



இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் அழகான கூந்தலை பெற முடியும் என்று கூறுகின்றனர்