வரும் பிப்ரவரி 1ம் தேதி, 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

வரும் காலங்களில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $120 டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது

எரிவாயு உற்பத்தி நாடுகளான ரஷ்யா- உக்ரைன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியா -ஏமன் நாட்டிலும் அசாதாரண சூழல் நிலவுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும்

உள்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன

கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் தயாரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மதிப்புக் கூட்டல்கள் குறையத் தொடங்கும். ஜிடிபி சரியத் தொடங்கும்.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகள் இந்திய பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்