மத்திய பட்ஜெட் 2022-23-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். கல்வி துறை: இந்த பட்ஜெட்டில் கல்வியில் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சுகாதாரம்: இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் மக்களின் பொது காப்பீட்டு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி: இந்த பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சியில் வேளாண் மற்றும் சிறுகுறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்க எழுந்துள்ளது. வேலைவாய்ப்பு: இந்த பட்ஜெட்டில் அதிகளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும் திட்டங்களில் கவனம் செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது. மூலதன செலவுகள்: இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு தன்னுடைய செலவினங்களில் மூலதன பொருட்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். முதலீடு: முதலீடு துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரியல் எஸ்டேட்: இந்த பட்ஜெட்டில் கட்டுமான தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஐடி துறை: டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வகையில் ஐடி துறைக்கு சில முக்கிய அறிவிப்புகள் இருக்க வேண்டும்.. வங்கிகள்: வங்கி தொடர்பான சேவைகளுக்கு ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.