அஜித் 3வது முறையாக போனி கபூர் - ஹெச்.வினோத் கூட்டணியில் ’துணிவு’ படத்தில் நடித்துள்ளார்



அக்டோபர் 28 ஆம் தேதி துணிவு படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது



இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது



படம் பொங்கலையொட்டி நிச்சயம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது



ஓடிடி தளத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது



அதேசமயம் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக மோதுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்



உதயநிதி ஸ்டாலினிடம் , வாரிசை விட துணிவுக்கு அதிக தியேட்டர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது



அதற்கு, சினிமாவில் நிச்சயம் அப்படி பண்ண முடியாது என்று அவர் கூறினார்



இதற்கு முன்னாடி இது போன்று இருபடங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றும் கூறினார்