கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/stylecraze

குறையும் கொழுப்பு

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதில் கறிவேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் கறிவேப்பிலை தனித்துவமானது.

Image Source: Pinterest/chefstandards1

மேம்படும் செரிமானம்

செரிமான நொதிகள் சுரப்பதை தூண்டுவதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், செரிமானம் சீராகிறது.

Image Source: Pinterest/balconygardenwe

காக்கப்படும் கல்லீரல்

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, கல்லீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

Image Source: Pinterest/Ministryofcurry

முடி வளர்ச்சி

இதில் ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக கறிவேப்பிலை உள்ளது. மயிர்க்கால்களை ஊக்குவிக்கும்.

Image Source: Pinterest/dipikashompa

சரும பராமரிப்பு

வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் இருப்பதால் கரும்புள்ளிகளை குறைத்து சரும பொலிவை அதிகரிக்கிறது.

Image Source: Pinterest/flickr

சுவாச பிரச்சினைகளுக்கு மருந்து

சுவாச பிரச்சினைகளை குணப்படுத்த கறிவேப்பிலை பயன்படுகிறது. சளி பிரச்சினை, தொண்டை எரிச்சலை குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Pinterest/pipingpotcurry

வாய் சுகாதாரம்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால் வாயின் துர்நாற்றத்தை நீக்கி, ஈறு வீக்கத்தையும் சரி செய்கிறது.

Image Source: Pinterest/wildturmeric

எடை இழப்பு

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிப்பதால், உடல் எடை குறைய வாய்ப்பு பிரகாசம்.

Image Source: Pinterest/thekitchn

இதய ஆரோக்கியம்

ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிகரிப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், இதயம் ஆரோக்கியமாகிறது.

Image Source: Pinterest/dassanasvegrecipes

ரத்த சோகையைத் தடுக்கிறது.

கறிவேப்பிலையில் போலிக் அமிலம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

Image Source: Pinterest/thespiceadventuress