கேரளா செல்கிறீர்களா? மிஸ் பண்ண கூடாத ஊர் இது!
கடற்கரை தொடங்கி ஷாப்பிங் செய்வதற்கான சந்தை என, பொழுதுபோக்கவும், இனிமையான நினைவுகளுக்கு ஏற்ற இடம் கொச்சி.
மட்டாஞ்சேரி அரண்மனை1555-ல் போர்ச்சுகீசிய ஆட்சியின் போது கட்டப்பட்டது. 1663-ல் டச்சுக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டது.அரண்மனை யில் அற்புதமான கேரள சுவரோவியங்கள் மற்றும் கொச்சியை ஆட்சி செய்த ராஜாக்களின் வரலாறு பற்றிய தகவல்கள் இருக்கும்.
கொச்சியில் உள்ள சீன மீன்பிடி வலைகள் சீனாவுடனான வரலாற்றை கடந்த காலத்தின் ரத்தினமாகும். 14 ஆம் நூற்றாண்டில் செங் ஹீ என்ற ஆய்வாளர் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த வலைகள் பார்ப்பதற்கு அற்புதமான காட்சி
ஆற்றங்கரை கிராமத்தில் அமைந்துள்ள கொடநாடு யானைகள் பயிற்சி மையத்தில் யானைகள் விளையாடுவது, பயிற்சி செய்வது, குளிப்பது ஆகியவற்றை காணலாம்.
1568 இல் கட்டப்பட்ட பரதேசி ஜெப ஆலயம் வரலாற்றின் பொக்கிஷமாகும்.விசித்திரமான கடிகார கோபுரம் பிரசித்தி பெற்று இருப்பதோடு, கொச்சியின் யூத கலாச்சாரத்தை மிகவும் நுட்பமான முறையில் விளக்குகிறது.
கொச்சியில் உள்ள கதகளி மையத்தில் கதகளி நடனத்தின் சிறப்பு மற்றும் வரலாறு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நகரத்தின் சத்தங்களின் இருந்து விடுபட்டு கடற்கரையில் அலைகளின் ஓசையில் நேரம் செலவிட நல்ல இடம்.
பள்ளிபுரம் கோட்டை இந்தியாவின் பழமையான ஐரோப்பிய நினைவுச்சின்னமாகும். இது 1503 இல் கட்டப்பட்டது.