சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்!

Published by: ஜான்சி ராணி

சுற்றுலா செல்வது ஓர் அனுபவம் என்றால் அங்கே இருக்கும் இடங்களை புகைப்படம் எடுப்பது சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

சுற்றுலா செல்லும்போது புகைப்படங்களை எடுக்க பிடிக்கும் என்பவர்களுக்கு ஏற்ற இடங்கள் இந்தியா முழுவதும் நிறையவே இருக்கு..

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

ஜெய்ப்பூர், இந்தியாவின் 'பிங்க் சிட்டி', பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலையுடன் சிறந்த பனோரமிக் காட்சிகளை கொண்டது.

ஸ்பிதி பள்ளத்தாக்கு, இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கு மலையேறுபவர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும்.

லே, லடாக்

அழகான பனி மூடிய மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் பழங்கால மடாலயங்கள் உள்ளன.

குடகு மலை, கர்நாடகா

'இந்தியாவின் ஸ்காட்லாந்து' குடகு மலை. கர்நாடகாவின் அமைந்துள்ள அழகான இடம். அழகான நிலப்பரப்பு, அபே மற்றும் இருப்பு போன்ற பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள் என அழகாக இருக்கும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கடற்கரை, தீவுகள் ஆகியவை அடங்கியது. மிகவும் அழகான சூழல் இருக்கும்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி பிரெஞ்சு வசீகரம் நிறைந்த ஊர். பல்வேறு வரலாற்று சிறப்பு இடங்கள், சிறப்பான உணவுகள் என புதிய அனுபவமாக இருக்கும்.

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்.