வயது, பாலினம் பேதமில்லாமல் அனைவரும் இளநரை பிரச்சினைக்கு ஆளாகிறார்கள் வறண்ட கூந்தல் பொலிவிழக்கும் போது இளநரையின் வேகம் வீரியமாக இருக்கும் தொடக்கத்திலேயே கவனம் செலுத்தினால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் கூந்தலை முதலில் சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலைக்கு குளித்தால் கூந்தலில் அழுக்கு படியாது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் நல்லெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெயை இலேசாக சூடு செய்து தலையில் சூடு பறக்க தேய்த்தால் உஷ்ணம் குறையும் மோசமான இராசயனம் கலந்த ஷாம்புவை தவிர்க்க வேண்டும் கெமிக்கல் அதிகமில்லாத தரமான ஷாம்புவை பயன்படுத்தலாம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது அவசியம்