கைகளை பயன்படுத்தி சாப்பிட்டு வந்த நாம், ஸ்பூன், ஃபோர்க்கால் சாப்பிட்டு வருகிறோம்



இந்தியா, கிரீஸ் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் மட்டும்தான் கைகளால் சாப்பிடும் பழக்கம் இருந்ததாம்



பாரம்பரியத்தை தாண்டி, இப்படி சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது



உணவை கைகளால் தொட்டு, அதனை உணர்ந்து, ருசித்து, மெதுவாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது



ஆயுர்வேத்தில் ஐந்து விரல்களால் சாப்பிடுவது ஐம்புலன்களை குறிக்கும் என கூறப்படுகிறது



ஆகாயம்(கட்டை விரல்), காற்று (ஆள்காட்டி விரல்), நெருப்பு (நடு விரல்), நீர் (மோதிர விரல்) மற்றும் நிலம் (சிறு விரல்) ஆகியவற்றை குறிப்பிடுகிறது



இப்படி ஐம்புலன்களை இணைத்து உணவு சாப்பிடும் போது உடலின் ஆற்றல் அதிகரிக்கிறதாம்



கைகளால் சாப்பிடுவது நமது தோல், வாய் மற்றும் குடலில் இருக்கும் சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உதவலாம்



வாய் மற்றும் வயிற்றில் உள்ள செரிமான நொதிகள் மற்றும் சாறுகளின் உற்பத்தியை மேம்படுத்தலாம்



ஆரோக்கியமாக வாழ கைகளால் உணவு உண்ணலாம் என்று கூறப்படுக்கிறது