நமது வீடுகளில் யாரேனும் ஒருவருக்கு செரிமானக்கோளாறு இருந்து வருகிறது



அப்படி இருப்பவர்களுக்கு, எலுமிச்சைதான் முதல் பரிந்துரையாக இருக்கும்



எலுமிச்சை பழத்தை நாம் தினசரி எடுத்துக் கொண்டால் உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்



காலையில் எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் செரிமானம் மேம்படும்



இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



எலுமிச்சை பழத்தில் உள்ள பெக்டின் ஃபைபர் பசியைக் கட்டுப்படுத்தும்



எலுமிச்சை நீர் சிறுநீரக கற்களை போக்க உதவலாம்



எலுமிச்சை நீர் உடலில் அமிலத்தன்மையை சீராக வைத்திருக்க உதவலாம்



எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவலாம்



சுவாசத்தை புத்துணர்ச்சியடைய செய்யவும், பாக்டீரியாவால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் உதவும்