தேங்காய் சட்னியை அரைத்து ஒரு மாதம் வரை பதப்படுத்தி பயன்படுத்த முடியுமா? தேங்காய் சட்னியை அரைத்து ஒருமாதம் வரை பதப்படுத்தி பயன்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அரை முடி தேங்காய் துருவிக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் வேர்கடலை,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பொரி கடலை எண்ணெயில் வதக்கவும். நன்கு வதங்கியவைகளுடன் ஃப்ரெஷ்ஷான மல்லி இலை போட்டு மிக்ஸியில் அரைக்கவும். இந்த சட்னியில் கொஞ்சம் எடுத்து ஐஸ் க்யூப் ட்ரேயில் போடவும். அதை கெட்டியாக்கி வைத்துக் கொள்ளவும். அதை எடுத்து ஃப்ரிட்ஜ் ஸ்டோரேஜ் கவரில் போட்டு அதை ஃப்ரீஸரில் வைத்துப் பாதுகாக்கவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இது ருசியை மாற்றவே மாற்றாது. அவ்வளவுதான்.