தலைமுடி உதிர்வது கவலையளிக்கிறதா? உங்களுக்கான டிப்ஸ்!



புரதச் சத்துள்ள உணவு: வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதம் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. உங்கள் டயட்டில் அதிக அளவு கோழி, மீன், முட்டை மற்றும் பால் போன்றவைகள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.



தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி.



முக்கியமான விசயம் எண்ணெய்; உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைக்க இதுவே உதவியாக இருக்கும்.



இரும்புச்சத்து நிறைந்த உணவு- உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ஆக்ஸிஜன் சுழற்சி செயல்முறை பாதிக்கப்படுகிறது. இது உச்சந்தலையில் குறைந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. கீரை, பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.



வைட்டமின் பி 7 சத்து நிறைந்த உணவுகள் உதவும்.கேரட், பாதாம், கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற வைட்டமின் பி-யின் சிறந்த ஆதாரமாக விளங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளவும்.



நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என எதுவாக இருந்தாலும், சுத்தமான எண்ணெய் எடுத்து, சற்றே சூடாக்கி, நம் தலைப்பகுதியில் தடவுவதோடு, சுழற்சி முரையில் தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.



பழங்கள், காய்கள், மாமிசம் என சத்துள்ள உணவுகள் சாப்பிடவும். உள்ளே என்ன சாப்பிடுகிறோம் அது மட்டுமே பலன் தரும். வெளிப்புறத்தில் மட்டும் கவனம் செலுத்துவதுக் கூடாது.



வாரத்திற்கு ஒரு முறை ஷாம்பூ இல்லாமல், தலைக்கு வெந்தயம், தேங்காய் பால், நல்லெண்ணெய், செம்பருத்தி பூ, இலை ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மாஸ்க் பயன்படுத்தலாம்.



தலைமுடியை நன்றாக பராமரிப்பதன் மூலமே ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்..