ப்ரெஷ்ஷான மீன்களில் கெட்ட வாடை வராது, அவற்றில் தண்ணீர் வாடையே வரும் ஸ்ட்ராங்கான வாடை வந்தால், பதப்படுத்த அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் மீன்களின் கண்கள் தெளிவாக இருக்க வேண்டும் அவற்றின் கண்கள் சற்று மங்கலாக இருந்தால் மீன் பழையது என்று அர்த்தம் மீன்கள் பார்க்க பளபளவென இருக்க வேண்டும், அதன் செதில்கள் இறுக்கமாக வேண்டும் பழைய மீன்கள் பார்க்க டல்லாக இருக்கும், அதன் செதில்கள் தானகவே உதிர்ந்து வரும் மீன்களின் செவிலை தூக்கி பார்த்தால், சிவப்பாக இருக்க வேண்டும் நல்ல மீனை வெட்டியவுடன் சிறிது இரத்தம் கசியும் நல்ல மீனை தொட்டு பார்த்தால் சாப்டாக இருக்கும், அத்துடன் ஈரப்பதமாக இருக்கும் பழைய மீன் கல் போன்று இருக்கும். உலர்ந்து காணப்படும்