முதலில் பிரிட்ஜில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்து விடுங்கள் ராக்குகளை வெளியே எடுத்து வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊறவைத்து, அழுக்குகளை அகற்றவும் இதற்கிடையில், குளிர்சாதன பெட்டியின் உட்புறங்களை சுத்தம் செய்யத் தொடங்குங்கள் பிடிவாதமான கறைகலாய் அகற்றுவதுதான் முதன்மையான வேலை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை துடைக்கும் துணியில் தண்ணீருடன் கலந்து பயன்படுத்துங்கள் சாஸ், ஜூஸ், பாட்டில்கள் வலிந்து பிசுபிசுத்து இருக்கும் இவற்றையும் நன்றாக துடைக்கவும். முடிந்தால் சரியாக மூடி , அதை தண்ணீரில் அலசவும் சமையல் சோடா வைத்து ஸ்க்ரப் செய்து, கழுவவும் பிரிட்ஜைத் துடைத்த பின்னரும் வாசம் வீசும் வெட்டப்பட்ட எலுமிச்சையை உங்கள் ஃப்ரிட்ஜின் எதாவது ரேக்கில் வைத்துவிட்டால் வாசம் வராது