இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார் உலக மக்கள் பலர் இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இவர் குறித்து நெட்பிளிக்ஸில் தி க்ரவுன் என்ற சீரிஸ் முன்னரே வெளியானது இது, இங்கிலாந்தின் அரச குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ராணி எலிசபெத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது அரச குடும்பத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களும் இதில் இடம்பெற்றுள்ளன எலிசபெத், மகாராணியாக உருவெடுத்தது குறித்தும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளது வெளியான புதிதில் இது சில சர்ச்சைகளை கிளப்பியது இதில் மொத்தம் 6 சீசன்கள் உள்ளது இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது