தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்... கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. 14.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒருசில இடங்களில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு பாரூர் (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), காஞ்சிபுரம் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு, மத்திய-கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை தகவலை தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்...