நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது அதன்படி இன்று மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது இதில் கழுகு பறந்து வருகிறது மேலும் இப்படம் 10 மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது 3டி தொழில் நுட்பத்திலும் படம் தயாராகி வருகிறது இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது இன்று வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்