வெந்தயத்தை தலைக்கு தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும் வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும் தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளிக்கலாம் பாசிப்பயறு மாவில் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம் தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம் வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும் வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும் பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்க்கலாம் துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிக்கலாம்