தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி சிவகாசியில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்தார் சிறு வயதிலேயே சினிமாவில் அடியெடுத்து வைத்த இவரை, சினிமா அப்படியே கட்டி அனைத்து கொண்டது கந்தன் கருணை மற்றும் துணைவன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சில நாட்களுக்கு முன்னர், ஜான்வி கபூர் இவருக்காக புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார், ஸ்ரீதேவி 1990 ற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த இவர், இங்கிலீஷ்-விங்கிலீஷ் படம் மூலம் கம்-பேக் கொடுத்தார் 16 வயதினிலே, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் இன்று வரை இவரது புகழை கூறுகின்றன ஸ்ரீதேவி இவ்வுலகை விட்டு மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றது இதையொட்டி ரசிகர்கள் பலர் ஸ்ரீதேவியின் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்